சரியான டைமில் வீடியோ ரிலீஸ் செய்த சோனியா காந்தி.. தேர்தல் களத்தில் ட்விஸ்ட்
காங்கிரசின் மகாலட்சுமி திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இன்று கடுமையான பண வீக்கத்திற்கு மத்தியில் பெண்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களின் கடின உழைப்புக்கும், தவத்திற்கும் நீதி கிடைக்க காங்கிரஸ் கட்சி, மகாலட்சுமி என்ற புரட்சிகர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இக்கட்டான நேரத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதுமே கரம் கோர்த்து நிற்கும் என்றும், இந்த கரம் உங்களின் நிலையை மாற்றும் என உறுதியளிப்பதகாவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.