பதவியை விட்டுக்கொடுத்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

Update: 2024-06-18 02:59 GMT

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். மத்திய பிரதேசம் மாநிலம் புத்னி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.வாக இருந்த சிவராஜ் சிங் சௌகான், விதிஷா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து மத்திய வேளாண்துறை அமைச்சராகவும் அவர் பதவி ஏற்றார். இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் ஏதேனும் ஒரு பதவியை மட்டுமே தொடர முடியும் என்பதால், புத்னி சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏ பதவியை சிவராஜ் சிங் சௌகான் ராஜினாமா செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்