பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கருத்தரித்த 16 வயது சிறுமியின் 27 வார கருவை கலைக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கண்ணூரை சேர்ந்த 16 வயது சிறுமியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பலாத்காரத்துக்குப் பிறகு கர்ப்பம் தரித்த ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி குழந்தை பெற்றெடுக்க வைக்க முடியாது என்றும் அந்த பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பது உரிமை மீறல் எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் கர்ப்பமாக இருப்பது சிறுமியின் உடலையும், மனதையும் பாதிக்கும் என்ற மருத்துவ அறிக்கையை பரிசீலித்து கருக்கலைப்புக்கு உத்தரவிடுவதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.