ரிலீசாகி இன்னும் வீட்டுக்கே போகல அதுக்குள்ளயா? -செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு வைத்த அன்புமணி

Update: 2024-09-28 02:29 GMT

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45 ஆயிரத்து 800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் வாரியத்திற்கு 400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு கையூட்டுத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்து ஓராண்டுக்கும் மேலாகியுள்ளதை அவர் சூட்டி காட்டியுள்ளார். மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி என குறிப்பிட்டுள்ள அவர், ஊழல் வழக்கில் சிறை சென்று விடுதலையான அவரை பெருந்தியாகம் செய்தவராக முதலமைச்சர் பாராட்டுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்