அரசியல் வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்த ஒற்றை பதிவு.. நன்றி தெரிவித்த மாணிக்கம் தாகூர்

Update: 2024-05-22 02:05 GMT

ராகுல் காந்தியின் வீடியோவை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பகிர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. உணவகம் ஒன்றில் மக்களோடு மக்களாக ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள செல்லூர் ராஜூ, தான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர் என்று ராகுல் காந்தியை குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்காக அதிமுக சார்பில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்