"சீமான், திருமா, கிருஷ்ணசாமி.. தலைவர்களை கொலை செய்ய சுற்றும் சிலர்" -அரசியல் களத்தை அதிரவிட்ட பேட்டி
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில், கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், அரசியல் தலைவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்தோடு சிலர் சுற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும், சீமான், திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோருக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.