பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் ஆஜரானார். அப்போது யூடியூபர் சவுக்கு சங்கரை இன்று மாலை 6 மணி வரை ஒரு நாள் போலீஸ் காவல் வைத்து விசாரிக்க உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ் இனியன் அனுமதியளித்து உத்தரவிட்டார். பின்னர் விசாரணைக்காக மீண்டும் சவுக்கு சங்கர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து செல்லப்பட்டார்.