சாட்டை ஆடியோக்களை லீக் செய்த திருச்சி சூர்யா.. பின்னணியில் 2 ஹை-ப்ரொபைல் காக்கி சட்டைகளா?
சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்த ஆடியோக்கள், சட்டவிரோதமாக போலீசார் வெளியிட்டுள்ளதாக, டிஜிபி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் சங்கரன், சாட்டை துரைமுருகன் கைது செய்த பின்னர், அவரது 2 செல்போன்களையும் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறினார். அவரிடம் இருந்த செல்போன் ஆடியோக்கள், திருச்சி சூர்யா மூலம் வெளியானதற்கு, எஸ்பி வருண்குமார் மற்றும் டிஎஸ்பி ஆனந்தன் ஆகியோர்தான் காரணம் என குற்றம் சாட்டினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.