சந்தேஷ்காலி விவகாரம்... பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசார்... மே.வங்கத்தில் பரபரப்பு
மேற்கு வங்க மாநிலத்தில், சந்தேஷ்காலி கிராமத்துக்குச் செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தேஷ்காலி கிராமத்தில் நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய ஷாஜகான் ஷேக்கை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறுவதால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இதையடுத்து அங்கு செல்ல முயன்ற சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைக் கண்டித்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் தமகாலியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.