"முடிந்த ஆளுநர் ரவியின் பதவிக்காலம்..குடியரசு தலைவர் உத்தரவிட்டாரா?"

Update: 2024-08-07 05:35 GMT

"முடிந்த ஆளுநர் ரவியின் பதவிக்காலம்..குடியரசு தலைவர் உத்தரவிட்டாரா?" - சந்தேகம் எழுப்பிய மூத்த வழக்கறிஞர்

தமிழக ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய ஆளுநர் நியமிக்கும் வரை பதவியில் தொடர குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளாரா என, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்..

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, தமிழக ஆளுநர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில கேள்விகளை கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி தமிழக ஆளுநர் மாற்றப்பட்ட நிலையில், ஜூலை 31-ஆம் தேதியுடன் அதன் பதவிக்கால முடிவடைந்துள்ளது. அதன்படி, புதிய ஆளுநரை நியமிக்கும் வரை பதவியில் தொடரலாம் என குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி இல்லையென்றால், எந்த அடிப்படையில் ஆளுநர் பதவியில் ஆர்.என். ரவி தொடர்கிறார் என்றும், பதவிக்காலம் முடிந்த பின்னர் பொறுப்பில் நீடிப்பது சட்ட விரோதம் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்