தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவண எழுத்தர் உரிமத் தேர்வை உடனே நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த தேர்வுக்கான வயதுவரம்பை அரசு நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தமிழகத்தில் பதிவு செய்யப்படும் சொத்து ஆவணங்களின் எண்ணிக்கை உயரும் அளவிற்கு ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கை உயரவில்லை என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.