``மிடில் கிளாஸ் மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசு தகர்த்திருக்கிறது'' - ராமதாஸ்

Update: 2024-08-05 09:56 GMT

வீடு வரைபட கட்டணத்தை உயர்த்தி, ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்...

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகட்டும் கனவை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தகர்த்திருக்கிறது எனக் குற்றம்சாட்டிய ராமதாஸ், கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். தமிழக அரசு மக்களை பாதிக்காத வகையில் அதன் வருவாயை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர அதற்கு பதிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் கட்டண உயர்வுகளை அறிவிக்கக் கூடாது என ராமதாஸ் அறிவுறுத்தினார்...

Tags:    

மேலும் செய்திகள்