ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்கட்டமைப்பின் ஒருங்கிணைந்த தோல்வி என்று குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகர திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றிற்கு விலையாக பொதுமக்கள் தங்கள் உயிரை கொடுத்து வருவதாகவும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.