"பணம் இல்லை என்றால் விளையாட்டு இல்லை, இதுதான் நிலை" - ராகுல் காந்தி பரபரப்பு ட்வீட்
அரியானாவில் பிரசாரத்திற்கு மத்தியில் விளையாட்டு வீரர்களோடு கலந்துரையாடிய ராகுல் காந்தி, காட்சியை பணம் இல்லை என்றால் விளையாட்டு இல்லை என குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். உணவு, ஓய்வு மற்றும் பயிற்சி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் போராடும் இளைஞர்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள், இது இந்தியா ஒலிம்பிக் போட்டியில் நம்பிக்கையை தவறவிடுவதை காட்டிலும் பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு நேரடியாக உதவும் அமைப்பை கொண்டுவராது, விளையாட்டு கழங்களில் வீரர்களுக்கு பதிலாக அரசியல்வாதிகளை பொறுப்பு வழங்கும் வரையில் இந்தியா தன்னுடைய உண்மையான திறனை அடைய முடியாது என சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவில் வரம்பற்ற திறமைகள் இருப்பதாக கூறியிருக்கும் ராகுல், வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் தேவையான ஒவ்வொரு வசதிகள் மட்டுமே ஒவ்வொரு நம்பிக்கைக்குரிய வீரருக்கும், சமமான பலனை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.