"மிகப்பெரிய பணக்கார கட்சி இதுதான்" - பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-05-01 15:15 GMT

மக்களவைத் தேர்தலையொட்டி அஸ்ஸாம் மாநிலம், துப்ரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரபரப்புரை கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதாகவும், 70 கோடி மக்கள் வேலையின்றி இருப்பதாகவும் அவர் கூறினார்.

விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்வு, வெள்ளம் வந்தால் உரிய நேரத்தில் இழப்பீடு வழங்கப்படாதது என மக்களின் துயரங்கள் முடிவடையாமல் சென்று கொண்டே இருப்பதாகவும் அவர் கூறினார்.

கர்நாடகாவில் பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் தடுத்து நிறுத்த பிரதமர் மோடி என்றும், இப்படிப்பட்டவர்கள்தான் பெண்களின் பாதுகாப்பை பற்றி பேசுவதாகவும் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரும் பணக்கார கட்சியாக பாஜக மாறி இருப்பதாக குறிப்பிட்ட பிரியங்கா, கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி கூட இவ்வளவு சம்பாதிக்கவில்லை என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்