திருமா-வுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் | thirumavalavan | Cm Stalin

Update: 2025-01-11 09:29 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், அக்கட்சி தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட முதல்வர், இந்த அறிவிப்பை அறிந்து மகிழ்வதாக தெரிவித்தார். மேலும், சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்