பிரேமலதா எடுத்த ஒரு முடிவு.. தமிழகமே நெகிழ்கிறது | Vijayakanth | Premalatha Vijayakanth

Update: 2024-09-29 04:45 GMT

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்தின் சிறப்புக் காட்சியை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் கண்டுரசித்து படக்குழுவினரை பாராட்டினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்தின் பாடல்களை படக்குழுவினர் மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளதாக பாராட்டினார். மேலும் விஜயகாந்த் தங்களது குடும்ப சொத்து இல்லை என்றும், அவர் மக்களின் சொத்து என்றும், அவரது பாடல்களை மக்கள் கொண்டாடுவதை வரவேற்பதாகவும் பிரேமலதா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்