அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரணையில் நீதிபதி சொன்ன இன்னொரு முக்கிய தகவல்

Update: 2024-06-18 07:54 GMT

அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரணையில் நீதிபதி சொன்ன இன்னொரு முக்கிய தகவல்

இறுதி கட்டத்தில் ஓபிஎஸ், தங்கம் தென்னரசு, KKSSR சொத்து குவிப்பு வழக்குகள் - பொன்முடி வழக்கில் நீதிபதி சொன்ன சேதி

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை, ஜூலை 22ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

1996 முதல் 2001 வரை, திமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002இல், அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை

விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், முன்னாள் முதல்வர்

ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்குகள் மீது

இறுதி விசாரணை நடந்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதி

ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 22க்கு தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்