மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சந்தித்து பேசினர். புதுச்சேரி, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், திமுக நிர்வாகிகளும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பிரதமர் மோடி தலைமையில் அமையும் அரசு எப்போது வேண்டுமானாலும் கலைய வாய்ப்புள்ளது என்று கூறினர்.