"34 வயது இளைஞரை மிரட்டும் 75 வயது முதியவர்.." - பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய தேஜஸ்வி யாதவ்
75 வயது முதியவர் 34 வயது இளைஞரை மிரட்டுவதாக பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடியைத் தாக்கிப் பேசியுள்ளார். பீகாரைக் கொள்ளையடித்தவர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விட்டுவைக்காது என்றும், அவர்களின் சிறைப் பயணத்திற்கான கவுண்ட்-டவுன் தொடங்கி விட்டது என்றும் பிரதமர் மோடி பேசி இருந்தார். இதனை சுட்டிக் காட்டி பேசிய தேஜஸ்வி யாதவ், பீகார் மக்கள் குஜராத் மக்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் பயப்பட மாட்டார்கள் என்றும், தங்களைத் தோற்கடித்தால் சிறைக்கு அனுப்புவோம் என்று 75 வயது முதியவர் 34 வயது இளைஞராகிய தன்னை மிரட்டுவதாகவும் தேஜஸ்வி யாதவ் சாடியுள்ளார்.