"பிரதமருக்கு, விசாரணை நடத்த துணிச்சல் இல்லை"- ராகுல் காந்தி விமர்சனம்

Update: 2024-05-19 02:10 GMT

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அரசியல் சாசனத்தை பாதுகாக்கவே ஆம் ஆத்மி கட்சியுடன் கைகோர்த்திருப்பதாக கூறினார். ஜனநாயகம் குறித்து பிரதமர் மோடியும், தானும் பொது விவாதம் செய்ய வேண்டும் என செய்தியாளர்களும் அறிஞர்களும் கடிதம் எழுதியதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். அதனை ஏற்று, எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பிரதமர் மோடியுடன் விவாதிக்கத் தயார் என்ற ராகுல் காந்தி, பிரதமர் மோதி விவாதத்திற்கு வர மாட்டார் என நிச்சயமாக கூறமுடியும் என்றார். அம்பானி அதானியிடம் டெம்போ நிறைய காங்கிரஸ் பணம் பெறுவதாக கூறிய பிரதமர் மோடிக்கு, இதுகுறித்து விசாரணை நடத்தும் துணிச்சல் இல்லை என்று விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்