ஒரே நாளில் 6 புதிய வந்தே பாரத் ரயில்கள் - எங்கெல்லாம் தெரியுமா?

Update: 2024-09-15 09:34 GMT

நாட்டில் புதிய வழித்தடங்களில் 6 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.நாட்டில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாடாநகர் - பாட்னா, பாகல்பூர் - ஹௌரா, பிரம்மபூர் - டாடாநகர், கயா - ஹௌரா, தியோகர் - வாரணாசி, ரூர்கேலா - ஹவுரா ஆகிய நகரங்களுக்கு இடையே புதிய வழித்தடங்களில் 6 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இப்பகுதியில் ஆன்மீக சுற்றுலா மற்றும் தொழில் வளத்திற்கு வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 660 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தவர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கிழக்கு இந்தியாவில் ரயில் இணைப்பு விரிவாக்கம் பிராந்தியத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்ற பிரதமர் மோடி, புதிய ரயில் திட்டங்களால் வணிகர்கள் மற்றும் மாணவர்கள் பயனடைவார்கள் என்று நெகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்