போர் பூமியான உக்ரைனுக்கு ரயிலில் செல்லும் மோடி.. போரில் திருப்பம்? உற்றுநோக்கும் உலகம்

Update: 2024-08-21 10:26 GMT

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் அரசு முறைப் பயணமாக, போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.டெல்லியிலிருந்து போலந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசுவதுடன், தலைநகர் வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். 45 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்துக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி​​ பெறுகிறார். இதற்கு முன்னர், 1979-ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். பிரதமர் மோடியின் இந்தப்பயணத்தின்போது, புவிசார் அரசியல் பிரச்சனை, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. போலந்தில் இருந்து ரயிலில் சுமார் 10 மணி நேரம் பயணித்து 23-ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார். அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று உக்ரைன் செல்லும் மோடி, தலைநகர் கீவில் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசுகிறார்.இதனிடையே, தனது உக்ரைன் பயணம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா-உக்ரைன் நட்புறவை ஆழப்படுத்த இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை விரைவில் திரும்பும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்....

Tags:    

மேலும் செய்திகள்