தனது தந்தை ராஜிவ் காந்தி, நடந்து சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர், வாரனாசியில் பிரதமர் மோடியின் வாகன பேரணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, தனது தந்தை பிரதமராக இருந்த போது, கிராமங்களுக்கு நடந்து சென்று, மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததாக கூறினார். மேலும், பிரதமராக இருந்த போது தனது தந்தை ராஜீவ் காந்தி மக்களின் கண்ணீரை துடைத்தெறிந்ததாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.