மோடிக்கு ஆதரவாக பதிவிட்ட பிரபல வீராங்கனை - கலாய்த்துவிட்ட தமிழக அமைச்சர்
பிரதமர் மோடியை ஏன் ஆதரிக்கக் கூடாது என்ற புத்தகத்தை படிக்குமாறு, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு 101 காரணங்கள் என்ற புத்தகத்தை காட்டி, எக்ஸ் தளத்தில் சாய்னா நேவால் பதிவு வெளியிட்டிருந்தார். இதனை குறிப்பிட்டு, தனது எக்ஸ் தளத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய மக்களை தவறாக வழிநடத்தும் முன்பு, மோடிக்கு 108 கேள்விகள் என்ற புத்தகத்தை படித்து, அவற்றுக்கான பதிலை, தங்களது தலைவரிடம் கேளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.