இரு நாள் அரசு முறை பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் சார்பில் பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதையும், வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலந்து பிரதமர் டானல்டு டஸ்கும், பிரதமர் மோடியும் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் போலந்து இடையிலான ராஜாங்க ரீதியிலான உறவு தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்து இருப்பதை கொண்டாடிக் கொண்டிருப்பதாக கூறினார். இந்த தருணத்தில், இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் மெகா உணவு பூங்கா திட்டத்தில் போலந்து நிறுவனங்களும் இணைய வேண்டும் என்று, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். பின்னர் பேசிய போலந்து பிரதமர் டான்ல்டு டஸ்க் போலந்து - இந்தியா நாடுகள் இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது என்பதற்கு இது சான்றாக விளங்குவதாக கூறினார்.