"ரத்து".. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

Update: 2024-07-12 03:29 GMT

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வது, சமூக நீதிக்கு எதிரானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஐம்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில், 15 துறைகளில் உள்ள இடங்களுக்கு மட்டும் இந்த இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் இந்த நிலைப்பாடு, சமூக நீதிக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் திறமையான மருத்துவ வல்லுனர்கள் இருப்பதற்கு காரணமே, இந்த இடஒதுக்கீடுதான் என்றும், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்