தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் கோரிக்கை

Update: 2024-02-17 08:54 GMT

தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் கோரிக்கை

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார். சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டிய பிகாரைத் தவிர்த்து கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மூன்று தென்னிந்திய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாகவும், ஆனால், அதற்கான முதல் படியைக் கூட தமிழக அரசு எடுத்து வைக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசு தான் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறி தமது கடமையை முடித்துக் கொள்வதாகவும் சாடியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்