"காட்பாடியை தொழில் நகரமாக மாற்றி தருவேன்" - வாக்குறுதி கொடுத்த பாமக வேட்பாளர்
அரக்கோணம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காளியம்மன் தோப்பு, தேனூர் அம்பேத்கர் சிலை, கலர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அவருக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, என்னை வெற்றி பெறச் செய்தால் காட்பாடியை தொழில் நகரமாக மாற்றி தருவேன் என வாக்குறுதி அளித்தார்....