போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் ஊதியத்தில், 3 வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும், இதில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த விவரமும் இல்லை என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். அவரது பதிவில், சமூக நீதிக்கு எதிரான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்றும் இந்த அறிவிக்கையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.