மோடி சர்க்காரை ஆட்டம்காண வைத்த ரிசல்ட்..! மாறும் அமைச்சரவை... லிஸ்டில் யார், யார்?
மத்தியில் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்க உள்ள நிலையில், புதிய அமைச்சரவையில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, 3வது முறையாக வரும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளார்.
card2
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில்,
card3
கூட்டணிக் கட்சிகள் மற்றும் பா.ஜ-க எம்பிக்கள் பலரும், அமைச்சர் பொறுப்பை பெற தீவிரம் காட்டி வருகின்றனர்.
card4
தகுதியான மற்றும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில்,
card5
பல்வேறு புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும், சில குறிப்பிட்ட நபர்களுக்கு கண்டிப்பாக அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
card6
அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், மன்சூக் மாண்டவியா உள்ளிட்ட பழைய முகங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
card7
பா.ஜ.க தலைவராக உள்ள ஜே.பி நட்டா, கேரளாவில் முதன்முறையாக பா.ஜ.க எம்.பி.யாக தேர்வான நடிகர் சுரேஷ் கோபி ஆகியோருக்கு, அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
card8
தெலங்கானாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள கிஷன் ரெட்டி, தெலங்கானா முன்னாள் மாநில தலைவர் மண்டி சஞ்சய் குமார்,
card9
கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, டெல்லியில் வெற்றி பெற்றுள்ள மனோஜ் திவாரி, முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் ஆகியோருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
card10
தெலுங்கு தேசம் கட்சி சார்பில், ராம் மோகன் நாயுடுவின் பெயரும், ஷிண்டே சிவசேனா கட்சி சார்பில் பிரதாப் ஜாதவ் பெயரும் பரிந்துரைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.