பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக கண்டிப்பாக இடம் பெறும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் குறித்து, உரிய நேரம் வரும் போது அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். கோவையில் வருகின்ற 21ஆம் தேதி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வைத்துள்ளதாக தெரிவித்த அவர், பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக கண்டிப்பாக இருக்கும் என்று கூறினார். சென்னையில் பெருமழை பெய்தால்கூட மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.