சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை அவர் நேரில் சந்திக்க சென்றார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற 50 கோடி ரூபாய் தான் செலவாகும் என்றார். ஆனால், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். 40 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக கூறுவதாகவும், ஆனால் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை என்றும் சீமான் குற்றம் சாட்டினார்.