நிர்மலா சீதாராமன் முன் பாயிண்ட் போட்டு லிஸ்ட் அடுக்கிய தங்கம் தென்னரசு | Nirmala Sitharaman

Update: 2024-06-22 12:32 GMT

பேசிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசின் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, மூன்று ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கப்படாததால், தமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதற்கான செலவுகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்க கோரினார். தமிழ்நாட்டில் பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய கோரினார். மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களில், குறைந்த பட்சம் 50 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்