மோடி பேச்சால் பற்றி எரியும் தமிழகம், ஒடிசா.. VK பாண்டியன் கொடுத்த தரமான பதிலடி
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் ஒடிசாவுக்கு வரும் அரசியல் டூரிஸ்டுகள் என பிஜு ஜனதா தளம் கட்சியின் வி.கே.பாண்டியன் விமர்சித்துள்ளார். ஒடிசா சட்டப்பேரவைக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், பிரச்சாரங்களில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 147 தொகுதிகளில் மூன்று பங்கு இடங்களை கைப்பற்றி பிஜு தனதா தளம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆறாவது முறையாக நவீன் பட்நாயக் ஆட்சி அமைப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.