65 ஆண்டுகள் பிறகு.. `நாளை' தொடங்கி வைக்கிறார் பிரதமர் | Modi

Update: 2024-08-02 16:17 GMT

வேளாண் பொருளியலாளர்களின் சர்வதேச சங்கம், மூன்று

ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யும் இந்த மாநாடு

65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்த மாநாடு

நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த

ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் கருப்பொருள், நிலையான வேளாண் உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகும். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்களின் சீரழிவு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள,

நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் கொள்கை

வகுப்பதில் செல்வாக்கு செலுத்துதல், டிஜிட்டல் விவசாயம்

மற்றும் நிலையான வேளாண் உணவு அமைப்புகளில் முன்னேற்றங்கள் உள்ளிட்ட இந்தியாவின் விவசாய முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்