பிரதமர் மோடி தமிழகத்திலேயே இருந்தாலும் கூட மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, தமிழக பட்ஜெட் மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கனிமொழி, பிரதமர் மோடி இப்போதெல்லாம் தமிழகத்தில் தான் இருக்கிறார் எனவும், அவ்வாறு அவர் இங்கேயே இருந்தாலும் கூட தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் கூறினார்