"கால் மரத்து போகுது"... நீதிபதியிடம் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி

Update: 2023-08-28 14:10 GMT

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம், இன்றுவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் காவல் நிறைவடைவதை ஓட்டி அவர், எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையின் நகல், அவரிடம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவலை, செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த காவல் நீட்டிப்புக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும், காணொளி வாயிலாக ஆஜரானால் போதும் எனவும் சிறப்பு நீதிமன்றம் கூறியது. செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், ஜாமினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுக சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனையடுத்து செந்தில் பாலாஜி, மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்