சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்.பியுமான கவுதம சிகாமணியை, வரும் நவம்பர் 24-ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில், அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உட்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மலர் வாலண்டினா, திமுக எம்.பி கவுதம சிகாமணி உட்பட வழக்கில் தொடர்புடையோரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.