விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் அமைச்சர் பொன்முடி கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த பெண்களிடம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து கேள்வி கேட்டு அவர் விளக்கம் அளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய போது அமைச்சர் பொன்முடி அதற்கு பதில் அளிக்காமல் அவரை ஒருமையில் பேசியது பொதுமக்ளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.