மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு, நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். சீர்காழி - நத்தம் சாலையில் நிகழ்ந்த விபத்தில், ராஜேஷ் என்ற காவலர் உயிரிழந்தார். இந்தநிலையில், ராஜேஷ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக 25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.