சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், 200 ரூபாய் கூடுதலாக மானியம் அறிவித்தும், அதன் விலையை 200 குறைத்துள்ள பிரதமருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார் அதே நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்...