"இத்தனை பேரா..?" - மிரள வைத்த தமிழக வேட்பாளர்கள்... வெளியான லிஸ்ட்

Update: 2024-04-09 13:21 GMT

தமிழகத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களில் 202 பேர் கோடீஸ்வரர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக வேட்பாளர்களின், வேட்புமனு விவரங்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. ஜனநாயக சுதந்திர சீர்திருத்தங்களுக்கான இயக்கத்தின் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 945 வேட்பாளர்களில் 202 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்றும், அனைத்து வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 2 கோடியே 24 லட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 135 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்