கேசவ விநாயகம் வழக்கு.. "உங்களுக்கு எதுக்கு அதுலாம்" - அதிரடி காட்டிய ஐகோர்ட்
பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதியுடன் தான் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மக்களவை தேர்தலின் போது சென்னை
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்ட
விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி,
தமிழக பா.ஜ.க தலைமை நிலைய செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐ போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்த இந்த சம்மனை எதிர்த்தும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் கேசவ விநாயகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது எந்த ஆதாரங்களும் இல்லாமல் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைத்து 4 மணி நேரத்துக்குப் பின், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் , விசாரணைக்கு சென்று திரும்பிய மறுநாளே, மொபைல் போன், சிம் கார்டுகளை ஒப்படைக்கக் கூறி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகவும்
கேசவ விநாயகம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரரின் மொபைல் போன் உங்களுக்கு எதற்கு, இது துன்புறுத்துவதற்கு சமம். அதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என காவல் துறை தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். தேவைப்பட்டால் நீதிமன்ற அனுமதியுடன் தான் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி
4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார்.