"ஆட்சிக்கு வந்தால்... CAA ரத்து செய்யப்படும், மணிப்பூர் பிரச்சனை.. " - அனல் பறக்க பேசிய பிரியங்கா காந்தி

Update: 2024-04-21 03:24 GMT

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்...

கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர்

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மணிப்பூர் பிரச்சனையை தீர்த்து மாநிலத்தை அமைதியான வாழ்க்கைக்கு கொண்டு வருவதாக கூறினார். பாஜகவுடன் முதல்வர் பினராயி விஜயன் சமரச அரசியலில் ஈடுபட்டதாகவும், ராகுல் காந்திக்கு எதிராக மட்டுமே அவர் பேசுவதாகவும் விமர்சித்தார். மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக இருப்பதாக கூறிய அவர், கட்சிக்காரர்களுக்கு மட்டுமே அரசு வேலை கிடைப்பதாகவும் குற்றம்சாட்டினார்..

Tags:    

மேலும் செய்திகள்