"இன்னும் 21 நாட்கள்" - பாஜகவுக்கு செக் வைத்த கெஜ்ரிவால்

Update: 2024-05-13 15:23 GMT

டெல்லியில் அக்கட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவும் , எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், தொண்டர்களை உடைத்துவிடலாம் என நினைத்து பாஜகவினர் என்னை சிறைக்கு அனுப்பிவிட்டதாக கூறினார். ஆனால் பாஜகவின் எண்ணம் தோல்வியடைந்து விட்டதாகவும், எனது கைதால் கட்சி மேலும் வலுவடைந்துள்ளதாகவும் கூறினார். ஆம் ஆத்மி ஒரு கட்சி மட்டுமல்ல 'ஒரு குடும்பம்' என்றும், அதை யாரும் உடைக்க முடியாது என்றும் அவர் கூறினார். இன்னும் 21 நாட்களில் எங்கு முடியுமோ, அங்கெல்லாம் சென்று, பா.ஜ.க.வை தோற்கடிக்க பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்தார்.

ஜூன் 2 ஆம் தேதி, மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்றும், ஆனால், ஜூன் 4 ஆம் தேதி இந்திய கூட்டணிஅரசாங்கத்தை மக்கள் அமைத்தால், நான் ஜூன் 5 ஆம் தேதி வெளியே வருவேன் என்று, அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்