Ex அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் அதிரடி அறிவிப்பு.. கர்நாடகாவில் பற்றும் நெருப்பு
கர்நாடகாவில் தமிழர்களுக்காக புதிய அமைப்பு உருவாக்கப்படுமென தமிழ் ஆர்வலரும், முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளருமான எஸ்.டி.குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள அல்சூரில் கர்நாடக தமிழர் ஒற்றுமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் எஸ்.டி. குமார் தலைமை தாங்கினார். இதில் பேசிய அவர், கர்நாடகாவில் பல லட்ச தமிழர்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதாக கூறினார். மேலும், விரைவில் தமிழர்களின் ஒற்றுமைக்காக புதிய அமைப்பு உருவாக்கப்படுமெனவும், கர்நாடக தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தப்படுமெனவும் தெரிவித்தார்.