மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என தி.மு.க எம்.பி கனிமொழி அறிவுறுத்தியுள்ளார். 'பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து' என்ற குறளை பதிவிட்டு, இவ்வாறு கூறியுள்ளார். பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும் என்பது இந்த குறளின் அர்த்தமாகும்.