``நல்லாட்சி காமராஜர் ஆட்சி; திமுக ஆட்சியும் காமராஜர் ஆட்சி தான்..'' - எம்.பி. விஜய் வசந்த்

Update: 2024-06-30 13:53 GMT

நல்லாட்சி செய்யக்கூடியவர்களின் ஆட்சி காமராஜர் ஆட்சி என்றும், தி.மு.க ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை அதிகமாக கொண்டு வருவதால், தி.மு.க ஆட்சியும் காமராஜர் ஆட்சிதான் எனவும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் வசந்த், கன்னியாகுமரியில் முதலில் நான்கு வழிச்சாலை அமைப்பதும், ரயில்வே பணிகளை விரைந்து முடிப்பதுமே, தனது முதற்கட்ட பணி என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்