காங். மூத்த தலைவர் பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல்.. கமல்நாத் சொன்ன பதில்

Update: 2024-02-18 07:45 GMT

மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்காததால், தனது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான நகுல்நாத்துடன் சேர்ந்து பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதால் மத்தியப்பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லி சென்றுள்ள கமல்நாத்திடம் செய்தியாளர்கள் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, அப்படி எதுவும் இருந்தால் முதலில் நிருபர்களுக்கு தெரிவிப்பேன் என்றும், இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ, அப்படி ஏதாவது நடந்தால் தானே முதலில் அறிவிப்பேன் என்றும் கமல்நாத் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்